கணணித்தமிழ்: செப்டம்பர் 2010

திங்கள், 20 செப்டம்பர், 2010

சனி, 18 செப்டம்பர், 2010

புங்குடுதீவு ஊரதீவு நிதியியல் படைப்புக்கள் ஒன்றிய விதிகள் உறுப்பினர் /சந்தா

வெள்ளி, 17 செப்டம்பர், 2010


நாம் நம்முடைய பதிவில் அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று நினைப்போம். ஆனால் நம்முடைய பிளாக்கரில் அனிமேஷன் படங்களை இணைத்தால் அது வெறும் சாதாரண படமாகவே(.png) தெரியும். இங்கு நாம் எப்படி கீழே உள்ளதை போல அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று பாப்போம்.




இதற்க்கு முதலில் http://photobucket.com/ தளத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதுவரை இல்லை எனில் இன்றே துவக்கி கொள்ளுங்கள் இதில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது இதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது.
அக்கௌன்ட் துவக்கியவுடன் உங்கள் username, password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். இப்பொழுது upload images& videos என்பதை அழுத்தி உங்கள் படத்தினை தேர்ந்துதெடுத்து கொள்ளவும். அப்லோட் ஆகியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.


இதில் உங்களுக்கு தேவையான டைட்டில் கொடுத்து விட்டு கீழே இருக்கும் Save&Get Links என்ற பட்டனை அழுத்தவும். அதை அழுத்தியவுடன் உங்களுக்கு உங்கள் படத்தின் url மற்றும் Html Code ஆகியவை கிடைக்கும். கீழே படத்தில் பார்க்கவும்.

மேலே உள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளது தான் உங்கள் படத்தின் html Code அதை காப்பி செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த html கோடினை உங்கள் பதிவின் Edit HTML என்ற பட்டனை அழுத்தி வரும் html mode ல் பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் compose பட்டனை அழுத்தி பார்த்தால் உங்கள் பதிவில்
அனிமேஷனோடு கூடிய படம் வந்திருக்கும்.


பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும்.
நம்முடைய பதிவில் எப்படி அனிமேஷன்(.gif) படங்களை இணைப்பது?

இணையதளம் உருவாக்கலாம்

பிளாக் ஆரம்பிப்பதற்கு அதிக கணினி அறிவு வேண்டும், அல்லது சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அவை முற்றிலும் தவறே. நீங்கள் பிளாக் ஆரம்பிக்க சிறிது கணினி அறிவு இருந்தால் சுலபமாக இருக்கும். கொஞ்சம் கூட கணினி அறிவு இல்லையா உங்களுக்கு போக போக கண்டிப்பாக பழகிவிடும். கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
Sign your Account
நீங்கள் பிளாக் ஆரம்பிக்க www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும். கீழே உள்ள Create Blog என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
நீங்கள் சொந்த சேவைக்கு உபயோகிக்கும் மெயிலை இதற்கு கொடுக்க வேண்டும் இதெற்கென்று ஜிமெயிலில் ஒரு புதிய அக்கௌன்ட் திறந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

CONTINUE என்ற பட்டனை அழுத்தவும்.
NAME OF YOUR BLOG
இந்த பகுதி உங்களுக்கு மிகவும் முக்கியமான பகுதி இங்கு தான் நீங்கள் உங்கள் பிளாக்கின் தலைப்பு மற்றும் BLOG URL தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தலைப்ப தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் எழுத போகும் பதிவிற்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுக்கவும்.
URL சிறியதாக உள்ளதை போல தேர்ந்தெடுக்கவும் வாசகர்களுக்கு நினைவில் வைக்க சுலபமாக இருக்கும்.
முடிந்த அளவு உங்கள் URL மற்றும் பிளாக்கின் தலைப்பு ஒன்றாக இருப்பதை போல தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த URL கொடுக்கும் போது இடையில் SPACE விட கூடாது.
URL கொடுத்து கீழே உள்ள Check Availability என்பதை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த ID காலியாக இருக்கிறதா இல்லை வேறு யாரேனும் உபயோக படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
This Blog address is available என்ற செய்தி வரும் வரை நீங்கள் URL சிறிது மாற்றம் செய்து கொடுத்து கொண்டே இருங்கள்.
அடுத்து கீழே உள்ள Verification code கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

CHOOSE YOUR BLOG TEMPLATE
இதில் மூன்றாவது படி உங்கள் பிளாக்கின் Template தேர்ந்தெடுப்பது அதாவது நம்முடைய பிளாக் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது.



இதில் நீங்கள் விரும்பிய டெம்ப்ளேட் தேர்வு செய்து கீழே உள்ள Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய பிளாக்கை தொடங்கி விட்டீர்கள். இப்பொழுதே நீங்கள் பதிவு எழுதவேண்டும் என்றால் கீழே உள்ள START BLOGGING என்ற பட்டனை அழுத்தவும். அது நேராக உங்களுடைய Post editior பகுதிக்கு கொண்டு செல்லும். கீழே உள்ள படத்தை பார்த்து உங்களுடைய பதிவை எழுத ஆரம்பியுங்கள்.





பதிவு எழுதி முடிந்ததும் கீழே உள்ள Preview என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்தால் எப்படி வரும் என்று நமக்கு காட்டும். சரி பார்த்த பின்னர் நம் பதிவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் செய்துவிட்டு அருகில் உள்ள PUBLISH POST என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பதிவு உங்கள் வலை தளத்தில் வெளியாகி விடும்





View Post கிளிக் செய்தால் போதும் உங்களுடைய நேராக உங்களுடைய பிளாகிற்கு உங்களை அழைத்து சென்று விடும். அதற்கு பின்னர்


உங்கள் பதிவை பிரபலமாக்க தமிழ் திரட்டிகளான இன்ட்லி, தமிழ்10, தமிழ்மணம் , உலவு, திரட்டி , தமிழ் உலகம் ஆகிய திரட்டிகளில் இணைத்து கொள்ளவும்.


டுடே லொள்ளு

வு சேவைகளும் எழுதுபொருட்களும்

வலைப்பதிவு சேவைகள்:

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். பலருக்கு அலுவலக உபயோகத்துக்காக தங்கள் நிறுவனம் அளித்த மின்னஞ்சல் முகவரி இருந்தாலும், சொந்த உபயோகத்துக்கு இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் நிறைய மின்னஞ்சல் சேவைகளில் ஒரு பயனராகப் பதிந்து ஒரு முகவரியையையாவது பெற்றிருப்போம். ஹாட்மெயில், யாஹூ, ஜிமெயில், ரிடிஃப்மெயில் போன்றவை இந்த வகை இலவச மின்னஞ்சல் சேவைகளில் பிரபலமானவை.

இதே வகையில் வலைப்பதிவுகளையும் இலவச சேவைகளாக பல இணைத்தளங்கள் அளிக்கின்றன. சிறப்பான சேவை வேண்டுவோர் செலவு செய்து தங்களுக்கென்று தனிப்பட்ட வழங்கி(server)யில் பிரத்தியேகமான பல கூடுதல் வசதிகளையுடைய சேவைகளை அமைத்துக்கொண்டாலும், பெரும்பாலும் இந்த இலவச சேவைகளே ஒருவர் முதன்முதலில் வலைப்பதிவு செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சேவையளிப்போரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

‘அதெல்லாம் சரி, எதற்கு இவர்கள் நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது?’ என்று கேட்கிறீர்களா.. நம் வலைப்பதிவுத் திரையில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் இவர்கள் தங்கள் செலவுகளை ஈடுகட்டுகிறார்கள், மேலும் சம்பாதிக்கிறார்கள். மின்னஞ்சல் வசதியிலும் விளம்பரங்கள் இடையில் சொருகப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறோமே!


ப்லாக்கர்.காம் (http://www.blogger.com)

இருக்கும் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இதுதான். எளிய அமைப்புக்களுடன், அதே சமயம் தேவையான பல வசதிகளுடன் வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், இணையத்தில் நெறிமுறைகள், சுதந்திரம், திறன், வேகம் ஆகிய அனைத்து அம்சங்களுக்காகவும் மதிக்கப்படுவதுமாகிய கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் அளிப்பது இது. எனவே நீண்ட நாள் நம்பகத்தன்மையுடன் இயங்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நான் உள்பட பலரும் முதலில் வேறு சேவைகளை பாவித்து, பிறகு பல அம்சங்களில் இந்த ப்லாக்கர்.காம் சேவையின் அனுகூலங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் வலைப்பதிவை இந்த சேவைக்கு மாற்றி இருப்பதே இதன் முதன்மைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தத்தொடரில் என்னுடன் கைகோர்த்து, நீங்கள் செய்துகொள்ளப் போகும் உங்கள் முதல் வலைப்பதிவுக்கு இதே சேவையைத்தான் பாவிக்கப் போகிறோம்.


Wordpress

Wordpress

வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/)

ப்லாக்கர்.காம்-ஐ விடவும் இன்னும் கூடுதல் வசதிகள் பல தரும் இந்த சேவையும் சிறப்பாகவே வேலைசெய்கிறது. ஆனால் உங்கள் வலைப்பதிவின் HTML ஐ மாற்றும் வசதியை வேர்ட்பிரஸ்.காம் வழங்குவதில்லை. இதனால் தமிழ்மணம் உள்ளிட்ட தளங்கள் வழங்கும் கருவிப்பட்டைகளை வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இணைக்க முடியாது என்பது தான் வேர்ட்பிரஸ்.காம் சேவையில் இருக்கும் பின்னடைவு ஆகும்.


வேர்ட்பிரஸ்.ஆர்க் (http://wordpress.org/)
wordpress.org

wordpress.org

வேர்ட்பிரஸ்.காம் பார்த்தோம் ? அதற்கும் வேர்ட்பிரஸ்.ஆர்க் என்ற தளத்திற்கும் என்ன வேறுபாடு ? வேர்ட்பிரஸ்.காம் இயங்கும் மென்பொருளை திறவுமூலமாக (open source) வேர்ட்பிரஸ்.ஆர்க் தளம் வழங்குகிறது. சரி…என்ன வேறுபாடு ?

உங்களுக்கு என்று தனி இணையத்தளம் உருவாக்கி கொள்ள வேண்டுமா ? http://yourname.wordpress.com என்றோ http://yourname.blogspot.com என்றோ இருப்பது உங்களுக்கு உவப்பு இல்லாமல், உங்கள் பெயருடன் ஒரு தளம் வேண்டுமா ? உதாரணமாக http://vinavu.com என்ற தளம் ? இதற்கு வேர்ட்பிரஸ்.ஆர்க் மென்பொருள் பயன்படும். உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தால் இதில் புகுந்து விளையாடலாம். வேர்ட்பிரஸ்.காம் சென்று மென்பொருளை தரவிறக்கி (download) உங்கள் தளத்தில் நிறுவி விட்டால் உங்கள் தளம் நீங்கள் சொன்னபடி கேட்கும். உங்களுக்கு நிரலி (Program) எழுத தெரிந்தால் உங்கள் தளத்தை நீங்கள் விரும்பியபடி மாற்றலாம்.

வேர்ட்பிரஸ்.ஆர்க் மூலம் மட்டும் தான் வைத்து கொள்ள முடியுமா ? எனக்கு ப்ளாகர் பிடித்து இருக்கிறது ? அதில் வைத்துக் கொள்ள முடியாதா ? முடியும். உதாரணமாக http://tamilsasi.com/ என்ற தளம் அவ்வாறு தான் இயங்குகிறது. உங்கள் ப்ளாகர் தளத்தில் இது குறித்த விபரங்கள் இருக்கும்.


இன்னும் பல வலைப்பதிவு சேவைகள் இருந்தாலும் ப்ளாகர்.காம், வேர்ட்பிரஸ்.காம், வேர்பிரஸ்.ஆர்க் மென்பொருள் போன்றவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிய வலைப்பதிவு தொடங்குபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் நல்லது. பிற வலைப்பதிவு சேவைகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் ஆதரிப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்


இந்தத் தொடரைப் பொறுத்தவரை நாம் முதலில் சொன்ன ப்லாக்கர்.காம் சேவையை மட்டும் இனிமேல் கவனத்தில் கொள்வோம். ஒரு பரஸ்பர புரிதலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் எடுத்துக்கொள்வதால் நம் நேரம் வீணாவதைத் தவிர்க்க இயலும். ஆனாலும், பெரும்பாலான செய்முறைகள் அமைப்புகள் எல்லா சேவைகளிலும் உள்ளவையே. எனவே, வேறு சேவைகளை விரும்புபவர்களுக்கும் இந்த தொடரில் காணும் விபரங்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

அப்பாடா, ஒரு வழியாக, தியரி கிளாஸ் முடிந்தது; இனி பிராக்டிகலுக்குப் போவோமா?

இது வரை நாம் வலைப்பதிவுகளைப் பற்றி அறிதல் என்ற கட்டத்திலேயே இருந்தோம். இனி மேல்தான் நம் வலைப்பதிவு தொடங்குவதற்கான முதல் செயலில் இறங்கப் போகிறோம். அந்த முதல் செயல் தமிழில் எழுத ஏதுவான ஒரு கருவி. கருவி என்றதும் எங்கோ வாங்கிவந்து நம் கணினியில் இணைக்கப் போகிறோமோ என்று எண்ணவேண்டாம். இது மென்பொருள்(Software). எனவே இணையத்திலிருந்து நாமே இறக்கிக்கொண்டு நம் கணினியில் நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

உங்களில் பலர் ஏற்கனவே கணினியில் தமிழ் எழுதும் வசதியை ஏற்படுத்தியிருப்பீர்கள். சிலர் கணினியில் இதுவரை தமிழ் படித்ததோடு சரி, ஒரு வரிகூட எழுதியதில்லை என்னும் நிலையில் இருக்கலாம்.

நமக்கு தமிழ் எழுதத் துணையாக இன்று பல கருவிகள் உள்ளன. அழகி, முரசு அஞ்சல் என்னும் செயலிகள் (software programs). இ-கலப்பை, NHM Writer போன்ற தட்டச்சு செலுத்திகள் (keyboard driver). இணையத்திலேயே எழுதும் வசதியுள்ள கருவிகளான (Online tools) புதுவை – தமிழ் எழுதி, கூகுள் கருவி போன்றவைகள். இவ்வாறான பல மென்பொருட்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்.

இவ்வாறான பல மென்பொருட்களில் பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுவது இ-கலப்பை என்பதால் நாம் அதை இறக்கி நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

ஏற்கனவே தமிழ் எழுதும் (தட்டச்சும், உள்ளிடும்..) வசதி வைத்து இருப்பவர்கள் இந்தப் படியை தாண்டிச் செல்லலாம். புதிதாய் வேண்டுபவர்கள் இதோ கீழே உள்ள சுட்டியிலிருந்து ‘இ-கலப்பை’யை இறக்கிக் கொள்ளுங்கள்.

http://code.google.com/p/ekalappai/downloads/list

இந்த இ-கலப்பை இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு எளிய மென்பொருள். மேலே கொடுக்கப்பட்ட சுட்டி, உங்களை இ-கலப்பை இறக்கிக்கொள்ள உதவும் ஒரு பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தமிழ் தட்டச்சுக்கு முற்றிலும் புதியவர் என்றால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தமிழ் தட்டச்சு செய்யும் Phonetic முறையில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக ஆங்கிலத்தில் thamiz என்று தட்டச்சு செய்தால் ”தமிழ்” என்று இ-கலப்பை தமிழில் மாற்றி கொடுக்கும்.

என்ன மிகவும் எளிதாக உள்ளதா ? தமிழ் தட்டச்சு செய்வது மிகவும் எளிமையானதே. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சு பழக்கம். பழக பழக வேகமாக சில மணி நேரங்களில் ஒரு சிறுகதையையோ, குறுநாவலையோ, கட்டுரையோ எழுதி விட முடியும்.

இ-கலப்பை செயல்படும் விதம்

இ-கலப்பை நிறுவியபின் உங்களுக்கு மூன்று வகையான விருப்பங்களை இது அளிக்கிறது. alt+2 தட்டினால் நமக்கு வலைப்பதிவுகளுக்கு பயனாகக் கூடிய யுனிகோடு (unicode) என்ற வகைக் குறியேற்றம் (encoding) தெரிவு செய்யப்படுகிறது. alt+3 தட்டினால் திஸ்கி (TSCII) என்ற தகுதரம் தெரிவு செய்யப்படுகிறது. ‘திஸ்கி’ ஒரு பழைய (Legacy) குறியேற்றம். திஸ்கி தற்பொழுது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இ-கலப்பை மேம்படுத்தப்படும் பொழுது ’திஸ்கி’ விலக்கப்படக்கூடும். எனவே நாம் யுனிகோடு முறையையே அதிகம் பாவிக்கலாம். alt+1 தட்டினால் பழையபடி ஆங்கில (ரோமன்) எழுத்துக்களுக்கு உங்கள் விசைப்பலகை திரும்பிவிடுகிறது. இதனால், மற்ற எந்த வேலைக்குப் பயன்படும் கணினியிலும் இந்த மென்பொருளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது. யுனிக்கோடு முறையைப் பாவிக்கவேண்டிய அவசியம் அதன் குறை-நிறைகளைப் பற்றி நிறையக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் யுனிகோடின் பொதுவான சில அனுகூலங்களை இங்கே குறிப்பிடலாம்:

கூகிள் போன்ற தேடும் பொறிகளில் தனித்துவத்துடன் தேடும்போது அகப்படும் வசதி. உதாரணமாய் ‘தமிழ்’ என்ற சொல்லை கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ் சார்ந்த தளங்களை கொண்டு வந்து கொடுக்கும்.

இன்னொரு அனுகூலம், விண்டோஸ் இயங்குதளங்கள் வரும்போதே தமிழ் யுனிகோடு எழுத்துரு(font)வாவது தன்னுள்ளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் யுனிகோடில் அமைந்த இணையப் பக்கங்களை, அவை, தாம் இயங்க ஆரம்பித்த முதல் நொடியிலிருந்தே, எந்த மேலதிக மென்பொருளும் நிறுவப்படாமல் திரையில் காட்டும் திறன் படைத்துள்

தமிழில் எழுதலாம் வாருங்கள்
தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப் பக்கம்

20Feb
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்
Posted by admin | Category: Uncategorized | 2 Comments

நம் முதல் வேலை, ப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒரு கணக்கு (account) துவங்குவது. நீங்கள் ஏற்கனவே ஜிமெயில் வைத்திருக்கிறீர்களா ? அந்த மின்னஞ்சல் முகவரியின் பயனர் பெயர், கடவுச்சொல் (Username, Password) கொண்டு ப்ளாகர்.காம் தளத்தில் நுழைய முடியும்.

சரி வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? அதற்குமுன், உங்கள் கணினியில் -கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும், இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும்.ஒரு சோதனை வலைப்பதிவை உருவாக்குவோம். முதலில் ப்ளாகர்.காம் தளத்தில் பயனர் பெயர்/கடவுச்சொல் கொடுத்து உள்நுழையுங்கள்.

நீங்கள் உள் நுழைந்தவுடன், கீழ்கண்ட பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்

இங்கு நீங்கள் ஜீமெயிலில் பதிவு செய்த உங்கள் பெயரும், மின்னஞ்சலும் தெரியும் (இந்தப் படத்தில் மறைக்கப்பட்டுள்ளது). Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரையோ, புனைப் பெயரையோ இட வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளுக்கு தமிழில் வைத்துக் கொள்வதே சிறப்பானது. -கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால் இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும். இதனையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து கீழே உள்ள பக்கம் வரும்

இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர், மற்றும் வலைப்பதிவின் முகவரி (Blog Address) ஆகியவற்றை இடுகிறோம். படத்தில் பாருங்கள் நான் செய்ததை.இதையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்

கீழே உள்ளது போன்ற அடுத்த பக்கம் வரும்

இந்தப் பக்கத்தில் நம் வலைப்பதிவு எப்படி தோற்றம் அளிக்க வேண்டும் என்ற அடைப்பலகையை (Template) தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைக்கு ஒரு அடைப்பலகையை தேர்தெடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் உங்கள் ரசனைக்கேற்ற பல அடைப்பலகைகள் இலவசமாக கிடைக்கின்றன. வலைப்பதிவு உங்களுக்கு நன்றாக பழக்கமான பிறகு அடைப்பலகையை மாற்றிக் கொள்ளலாம். ஒரு அடைப்பலகையை தேர்ந்தெடுத்துக் கொண்டு Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்த பக்கம் கீழே உள்ளது

அவ்வளவு தான். உங்கள் வலைப்பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. உங்கள் வலைப்பதிவின் முதல் கட்டம் முடிந்து விட்டது. இனி உங்கள் வலைப்பதிவில் இடுகைகளை (Posts) சேர்க்க வேண்டும்.

இப்பொழுது “START BLOGGING” என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வலைப்பதிவிற்கு இடுகையை சேர்க்கும் கீழ்க்கண்ட இடைமுகம் வரும்

இந்த இடைமுகத்தில் தான் நாம் நமது இடுகைகளை வலைப்பதிவுல் வெளியிட (Publish) வேண்டும். முதலில் உங்கள் இடுகைக்கு ஒரு தலைப்பை தெரிவு செய்யுங்கள். சோதனைக்காக சோதனை இடுகை என வைத்துக் கொள்வோம். உங்கள் இடுகையை படத்தில் உள்ளது போல எழுதலாம். அடுத்ததாக குறிச்சொல். உங்கள் இடுகைக்கு சில குறிச்சொற்களை கொடுக்க வேண்டும். அது என்ன குறிச்சொல். ஆங்கிலத்தில் இதனை Tag என அழைப்பார்கள். உங்கள் இடுகையை எதனைச் சார்ந்தது என்பது குறித்த சில குறிப்புகளே குறிச்சொல் ஆகும். உதாரணமாக அரசியல் என்று குறிக்கலாம். எதனைக் குறித்து என்பதை குறிப்பாக உணர்த்த குறிச்சொலை பயன்படுத்த வேண்டும். அரசியல் என்ற பொதுவான குறிச்சொல்லுடன் திமுக, தேர்தல் 2011, பிரச்சாரம், சென்னை, தாம்பரம் பொதுக்கூட்டம் என பல குறிச்சொற்களை ஒரு இடுகைக்கு வைக்கலாம்.

சரிஎதற்கு குறிச்சொல் வைக்க வேண்டும் ? அதன் பயன் என்ன ?

கூகுள் மூலமாக பலர் பலவற்றை தேடுகிறார்கள். ஒருவருக்கு அரசியல் என்று தேடினால் உங்களுடைய இந்தக் கட்டுரை கூகுளில் தெரியும். ஒருவர் தாம்பரம் பொதுக்கூட்டம் என குறிப்பாக தேடினாலும் உங்களுடைய இந்த இடுகை கூகுள் தேடுதலில் வரும். பல பொருத்தமான குறிச்சொற்களை கொடுப்பது ஒரு சிறந்த உத்தி ஆகும்.

சரி இடுகை எழுதியாயிற்று, குறிச்சொல் வைத்தாயிற்று. அடுத்து என்ன ? வலைப்பதிவை வெளியிட வேண்டும். அதற்கு publish என்ற பொத்தானை அழுத்துங்கள். அது கீழ்க்கண்ட பக்கத்தை கொண்டு வரும். இதற்கிடையில் உங்கள் இடுகையும் வெளியாகி விடும்.

இப்பொழுது “View Post” என்ற சுட்டியை சொடுக்கினால் உங்கள் வலைப்பதிவு தெரியும். உங்கள் புதிய இடுகையும் வலைப்பதிவில் தெரியும்.

அவ்வளவு தான் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியாகி விட்டது. நீங்களும் ஒரு வலைப்பதிவ
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
Posted by admin | Category: Uncategorized | 4 Comments

முந்தைய கட்டுரைகளில் வலைப்பதிவு எதற்கு என்பதையும், வலைப்பதிவு சம்பந்தப்பட்ட சில முக்கியக் கேள்விகளுக்கு விடையையும் பார்த்தோம். வலைப்பதிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் சில சுட்டிகள் கொடுத்திருந்தோம், அவற்றிலும் சிலவாவது சென்று பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆக, வலைப்பதிக்கவேண்டும் என்று நீங்கள் தயாராகியிருப்பீர்கள்.

நமக்காக நாமே ஒரு வலைப்பதிவு உருவாக்கப் போகிறோம். அதன் முதல் படியாக வாசகர் பார்வையிலிருந்து ஒரு வலைப்பதிவின் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று காணலாம். பின்னால் நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது குழப்பம் எதுவும் வராமல் இருக்கவும் இந்த விளக்கம் அவசியம். இதோ ஒரு எளிமையான வலைப்பதிவின் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்போமா?

கீழே உள்ள படத்தின் உள்ள எண்களின்மேல் அல்லது முக்கியப்பகுதிகளின்மேல் சொடுக்கினால் அதைப் பற்றிய விளக்கத்தை அறியலாம்.

இனி இந்தப் படத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தின் தேவையையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம். கூடவே ஆங்கிலப்பெயர்களையும் பயன்படுத்தலாம். இந்த வேலைகள் செய்யத்தேவையான ஆங்கில அறிவு கொஞ்சமே, அது இன்று தமிழறிவைவிட நம் மக்களிடம் அதிகமாகவே இருப்பதால், இது ஒரு பிரச்னையில்லை!
1. வலைப்பதிவின் பெயர் (Title):

ஒவ்வொரு வார இதழ், இணைய இதழ், புத்தகம் எல்லாவற்றையும் போல நம் வலைப்பதிவிற்கு இதுவே அடையாளம். சிலர் தன் பெயரிலேயே தன் வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணங்கள், கிறுக்கல்கள், சிந்தனைகள் என்று வைக்கிறார்கள். நம் கற்பனைக்குதிரையை இங்கிருந்தே ஓட்ட ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்பெயராக வைத்துக்கொள்ளுவது நல்லது. இது என் தனிப்பட்ட ஆலோசனை.

2. வலைப்பதிவைப்பற்றிய விபரம்(Description):

ஒரு வலைப்பதிவர் தன்னைப்பற்றி அல்லது இங்கு எதைப்பற்றியெல்லாம் எழுதப்படும் என்பது பற்றி இங்கு குறிக்கலாம். இது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பகுதி. அவரவர் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், புதிதாக வலைப்பதிவுக்கு வருகை தரும் ஒரு வாசகருக்கு இங்குதான் அந்த வலைப்பதிவைப்பற்றிய முதல் அபிப்ராயம், உருவம் கிடைக்கப் போகிறது. அது நல்லதாக, உண்மையாக, தெளிவாக இருக்கும்படி இருக்க வேண்டும். இது ஓரிரு சொற்றொடர்களில் இருத்தல் நலம்.

உதாரணங்கள்:

வினவு, வினை செய் !
விரிவெளித் தடங்கள்

மேலே கண்ட இரண்டும் ஒரு வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் நிலையான அம்சங்கள். இது போல இன்னும் இரு நிலையான பகுதிகள் பொதுவாக ஒரு வலைப்பதிவில் காணப்படும். அவை என்ன என்று அடுத்துக் காண்போம்.
3. முந்தையவை (Archives):

நாம் முன்னமே பார்த்ததுபோல, ஒரு வலைப்பதிவு தொடர்ந்து புதிய எழுத்துக்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படும் ஒன்றுதானே. எனவே முகப்புப் பக்கத்திலேயே இதுவரை ஒருவர் எழுதிய அனைத்தையும் காட்டினால் எப்படி இருக்கும்? பார்ப்பவர்கள் இது என்னடா சோதனை என்று எண்ண மாட்டார்களா? உதாரணமாக ஒரு ஐம்பது விஷயங்களை ஒருவர் இதுவரை எழுதியிருந்தால் அந்த ஐம்பதும் முன்பக்கத்தில் காட்டப்படுவதில்லை. கடைசியாக எழுதப்பட்ட விஷயம் முதலில் வரும்படிதான் பொதுவாக வலைப்பதிவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அத்தோடு முகப்புப் பக்கத்தில் எத்தனை விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதை நாம் வலைப்பதிவின் அமைப்பு விவரங்களை மேலாண்மை செய்யும்போது வரையறுத்துவிடலாம்.

இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை விஷயங்கள் தவிர, அதற்குமுன் எழுதப்பட்டவற்றை தானாகவே வாரவாரியாகவோ, மாதவாரியாகவோ கோர்த்து, அவற்றைத் தனியான வலைப்பக்கங்களாக்கி, அவற்றுக்கு சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இதையெல்லாம் பொறுமையாகச் செய்வது? அந்தக் கவலையே நமக்கு வேண்டாம். எல்லாவற்றையும் வலைப்பதிவுச்சேவையே பார்த்துக்கொள்ளூம். இதுவும் வலைப்பதிவை வலைத்தளங்களிலிருந்து வேறுபடுத்தும் பல அம்சங்களில் ஒன்று.
4. இணைப்புகள் (Links):

அடுத்த முக்கியமான பாகம் இது. ஒவ்வொரு வலைப்பதிவும் தனித்து சுயேச்சையாய் இயங்குவதில்லை. இணையமே ஒரு மிகப்பெரும் கூட்டுறவு அமைப்புத்தானே. அதே கருத்தில் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்கு விருப்பமான, தங்கள் வாசகருக்குப் பயனாகக்கூடிய வேறு இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது வழக்கம். இது முழுக்க முழுக்க ஒருவலைப்பதிவரின் விருப்பமே. நம் நண்பர்களின் வலைப்பதிவுகள், தமிழ் மென்பொருள்/எழுத்து உதவி சம்பந்தமான தளங்கள், வலைப்பதிவுகளின் சஞ்சிகை, பட்டியல் போன்றவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.

இதுவரை பார்த்தவை ஒரு வலைப்பதிவின் நிலையான அம்சங்கள். இனி வரப்போவது மாறும் அம்சங்கள்.
5. இடுகை (Post or Entry):

இதுதான் ஒருவர் எழுதிக்குவிப்பது. ஒவ்வொரு முறையும் அவர் எழுதிப் பதிப்பிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு இடுகை (இடப்படுவது, one that is posted) எனலாம். சாதாரணமாக ஒரு இடுகை ஒரு வரியிலிருந்து, சில 100 வரிகள் வரை இருக்கலாம். தினமும், அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை இடப்படுவதாயின், 100 வரிகளுக்கும் மிகாமல் இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஆர்வக்குறைவில்லாமல் இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அவரவர் விரும்பியதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பதிப்பிப்பதுதானே வலைப்பதிவின் மையக்குறிக்கோள், எனவே இதன் நீளம் நம் விருப்பம். இடுகைகள் வெறும் கட்டுரைகளாக இல்லாமல், சுட்டிகள், படங்கள், பட்டியல்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்தாலே இணையத் தொழில்நுட்பத்தின் முழுவீச்சினையும் பயன்படுத்தியதாக ஆகும். இவை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை, பின் வரும் பாகங்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.
6. இடுகையின் தலைப்பு (Title of the Post):

இதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வோரு இடுகைக்கும் ஒரு அர்த்தமுள்ள தலைப்பிடுவது, வாசிப்பவருக்கு மிகவும் பயனுள்ளது. தங்கள் நேரத்தை ஒருவர் செலவிடும் முன் அது தேவைதானா என்பதை இதை வைத்து முடிவுசெய்ய முடியும். சில விசேட குறிக்கோள்களுடன் இயங்கும் வலைப்பதிவுகள், தலைப்பில்லா இடுகைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரும்பத் தகுந்ததல்ல.
7. இட்டவர் பெயர், மற்றும் நேர முத்திரை? (author and Time-stamp)):

பலரும் எழுதும் கூட்டு வலைப்பதிவுகளில் இந்த விபரங்கள் முக்கியமாகத் தேவை. ஒருவர் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளில் யாரால் எழுதப்பட்டது என்பது பெரிய தகவல் அல்ல. ஒரு நாளைக்குப் பலமுறை எழுதப்படும் வலைப்பதிவுகளில் ஒவ்வொரு இடுகையும் எந்த நேரத்தில் இடப்பட்டது என்பதைக்குறிக்கும் நேரமுத்திரை முக்கியமானது. மற்றபடி இந்தத்தகவல்கள் பெரிய முக்கியத்துவம் இல்லாதவையே. ஆனாலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகள், இந்த விவரத்தையும் தானாகவே காட்டும்படி அமைக்கப்பட்டே வருகின்றன.
8. நாள் முத்திரை (Date-line):

இதுவும் தானாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஒரே நாளில் பல இடுகைகள் இருந்தால் அவையனைத்தும் இந்த நாள் முத்திரைக்குக் கீழ் காட்டப்படும். ஒரு இடுகை என்று எழுதப்பட்டது என்ற விவரம் பலசமயம் முக்கியமான ஒன்று. அதிலும் தினமும் புதுப்புது விஷயங்களை எழுதும்போது, பல நாள் கழித்துப் பார்த்தால் அது என்று எழுதப்பட்டது என்பதை வைத்து அன்று நம் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்று அறியவும் இது பயனாகிறது.
9. நிலையான சுட்டி (Permalink):

ஒருவர் தம் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒரு விஷயத்தை இன்னொருவருக்குச் சுட்ட விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் அந்த விஷயத்தைப் படித்து, அதே முகப்புப் பக்கத்தின் உரலை (URL) மின்னஞ்சல்மூலம் அனுப்புகிறார். அதைப் பெறுபவர், அந்த உரலை தன் உலாவியில் இட்டால் அதே பக்கம் அவரது கணினித்திரையிலும் தெரிகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கண்டபடி இன்று முகப்புப் பக்கத்தில் இருப்பது சில நாள் கழித்துமுந்தையபக்கங்களில் ஏற்றப்பட்டுவிடும். புதிதாய் இடப்பட்டவை முகப்புப் பக்கத்தில் இருக்கும். எனவே அவர் தேடியது கிடைக்காமல் போகுமல்லவா? இந்தப் பிரச்னைக்கு விடைதான் இந்தப் புத்தக்கக்குறி. ஒவ்வொரு இடுகைக்கும், வலைப்பதிவுசேவையே ஒரு நிலையான உரலை அளிக்கும். அந்த உரல் வேண்டுவோர் இந்த புத்தக்ககுறியைச் சொடுக்கினால், உலாவியின் முகவரிக் கட்டத்தில் இப்போது முழு உரலும் தெரியும். இதை நகலெடுத்து இன்னொருவருக்கு அனுப்பினால், எத்தனை மாதங்கள் கழித்தும் அந்தக் குறிப்பிட்ட இடுகையை எட்டமுடியும்.

பெரும்பாலும் இது # குறியால் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறகு நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.
10. மறுமொழிகள் (அல்லது) பின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் இன்னொரு முக்கிய அம்சம், வாசிப்பவர் தன் கருத்தை உடனுக்குடன் பதிக்கும் வசதி. இது யாருடைய ஈடுபாடும் தேவையின்றி தானாக நடக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இதுவரை எத்தனை மறுமொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விவரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இங்கே இருக்கும். அதைச் சொடுக்கினால், அது இருக்கும் மறுமொழிகளை காட்டவும், மேலும் மறுமொழிகள் இடவும் வசதியுள்ள சன்னலுக்கு அழைத்துச் செல்லும். மேலதிகமாக நிறைய வசதிகள் செய்ய தேவையும் வாய்ப்பும் உள்ள இடம் இந்த மறுமொழிப் பெட்டி. அதை பின் வரும் பாகங்களில் விபரமாகக் காணலாம்.
அப்பாடா, ஒரு வறட்சியான கட்டத்தைத் தாண்டிவிட்டோம். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் தெளிவு இல்லையென்றால் மேற்கொண்டு நாம் செய்யப்போகும் வேலைகளில் காலமும், உழைப்பும் வீணாகிவிடும், எனவே ஒருமுறைக்கு இருமுறை இவற்றைப் படித்து தெளிந்துகொள்வோம்.

இன்னொன்றையும் சொல்லலாம், மேலே கண்ட அமைப்புகள் ஒரு எளிமையான வலைப்பதிவின் அடையாளங்கள். இவற்றில் எதுவும் குறைந்தும் இருக்கலாம், அல்லது இன்னும் மேலதிகமாக வாக்குப்பெட்டி, அரட்டைப்பெட்டி, போன்ற பல கூடுதல் வசதிகளும் இருக்குமாறும் அமைக்கலாம். எல்லாமே அவரவர் விருப்பத்தைம், திறமையையும் பொறுத்தது.