கணணித்தமிழ்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

தமிழில் எழுதலாம் வாருங்கள்
தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப் பக்கம்

20Feb
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்
Posted by admin | Category: Uncategorized | 2 Comments

நம் முதல் வேலை, ப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒரு கணக்கு (account) துவங்குவது. நீங்கள் ஏற்கனவே ஜிமெயில் வைத்திருக்கிறீர்களா ? அந்த மின்னஞ்சல் முகவரியின் பயனர் பெயர், கடவுச்சொல் (Username, Password) கொண்டு ப்ளாகர்.காம் தளத்தில் நுழைய முடியும்.

சரி வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? அதற்குமுன், உங்கள் கணினியில் -கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும், இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும்.ஒரு சோதனை வலைப்பதிவை உருவாக்குவோம். முதலில் ப்ளாகர்.காம் தளத்தில் பயனர் பெயர்/கடவுச்சொல் கொடுத்து உள்நுழையுங்கள்.

நீங்கள் உள் நுழைந்தவுடன், கீழ்கண்ட பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்

இங்கு நீங்கள் ஜீமெயிலில் பதிவு செய்த உங்கள் பெயரும், மின்னஞ்சலும் தெரியும் (இந்தப் படத்தில் மறைக்கப்பட்டுள்ளது). Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரையோ, புனைப் பெயரையோ இட வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளுக்கு தமிழில் வைத்துக் கொள்வதே சிறப்பானது. -கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால் இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும். இதனையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து கீழே உள்ள பக்கம் வரும்

இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர், மற்றும் வலைப்பதிவின் முகவரி (Blog Address) ஆகியவற்றை இடுகிறோம். படத்தில் பாருங்கள் நான் செய்ததை.இதையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்

கீழே உள்ளது போன்ற அடுத்த பக்கம் வரும்

இந்தப் பக்கத்தில் நம் வலைப்பதிவு எப்படி தோற்றம் அளிக்க வேண்டும் என்ற அடைப்பலகையை (Template) தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைக்கு ஒரு அடைப்பலகையை தேர்தெடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் உங்கள் ரசனைக்கேற்ற பல அடைப்பலகைகள் இலவசமாக கிடைக்கின்றன. வலைப்பதிவு உங்களுக்கு நன்றாக பழக்கமான பிறகு அடைப்பலகையை மாற்றிக் கொள்ளலாம். ஒரு அடைப்பலகையை தேர்ந்தெடுத்துக் கொண்டு Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்த பக்கம் கீழே உள்ளது

அவ்வளவு தான். உங்கள் வலைப்பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. உங்கள் வலைப்பதிவின் முதல் கட்டம் முடிந்து விட்டது. இனி உங்கள் வலைப்பதிவில் இடுகைகளை (Posts) சேர்க்க வேண்டும்.

இப்பொழுது “START BLOGGING” என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வலைப்பதிவிற்கு இடுகையை சேர்க்கும் கீழ்க்கண்ட இடைமுகம் வரும்

இந்த இடைமுகத்தில் தான் நாம் நமது இடுகைகளை வலைப்பதிவுல் வெளியிட (Publish) வேண்டும். முதலில் உங்கள் இடுகைக்கு ஒரு தலைப்பை தெரிவு செய்யுங்கள். சோதனைக்காக சோதனை இடுகை என வைத்துக் கொள்வோம். உங்கள் இடுகையை படத்தில் உள்ளது போல எழுதலாம். அடுத்ததாக குறிச்சொல். உங்கள் இடுகைக்கு சில குறிச்சொற்களை கொடுக்க வேண்டும். அது என்ன குறிச்சொல். ஆங்கிலத்தில் இதனை Tag என அழைப்பார்கள். உங்கள் இடுகையை எதனைச் சார்ந்தது என்பது குறித்த சில குறிப்புகளே குறிச்சொல் ஆகும். உதாரணமாக அரசியல் என்று குறிக்கலாம். எதனைக் குறித்து என்பதை குறிப்பாக உணர்த்த குறிச்சொலை பயன்படுத்த வேண்டும். அரசியல் என்ற பொதுவான குறிச்சொல்லுடன் திமுக, தேர்தல் 2011, பிரச்சாரம், சென்னை, தாம்பரம் பொதுக்கூட்டம் என பல குறிச்சொற்களை ஒரு இடுகைக்கு வைக்கலாம்.

சரிஎதற்கு குறிச்சொல் வைக்க வேண்டும் ? அதன் பயன் என்ன ?

கூகுள் மூலமாக பலர் பலவற்றை தேடுகிறார்கள். ஒருவருக்கு அரசியல் என்று தேடினால் உங்களுடைய இந்தக் கட்டுரை கூகுளில் தெரியும். ஒருவர் தாம்பரம் பொதுக்கூட்டம் என குறிப்பாக தேடினாலும் உங்களுடைய இந்த இடுகை கூகுள் தேடுதலில் வரும். பல பொருத்தமான குறிச்சொற்களை கொடுப்பது ஒரு சிறந்த உத்தி ஆகும்.

சரி இடுகை எழுதியாயிற்று, குறிச்சொல் வைத்தாயிற்று. அடுத்து என்ன ? வலைப்பதிவை வெளியிட வேண்டும். அதற்கு publish என்ற பொத்தானை அழுத்துங்கள். அது கீழ்க்கண்ட பக்கத்தை கொண்டு வரும். இதற்கிடையில் உங்கள் இடுகையும் வெளியாகி விடும்.

இப்பொழுது “View Post” என்ற சுட்டியை சொடுக்கினால் உங்கள் வலைப்பதிவு தெரியும். உங்கள் புதிய இடுகையும் வலைப்பதிவில் தெரியும்.

அவ்வளவு தான் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியாகி விட்டது. நீங்களும் ஒரு வலைப்பதிவ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக