இணைய இணைப்பே இன்றி தமிழில் எழுத இங்கே படிக்கவும்..
இந்த சுட்டியை நகலெடுத்து மேலுள்ள உங்களின் உலாவியிலிட்டு இணைப்பை சொடுக்கவும்:- http://www.google.co.in/transliterate/indic/Tamil
http://www.google.co.in/transliterate/indic/Tamil இப்பக்கத்தில் சென்று இணைய இணைப்பு மூலம் தமிழில் தட்டச்சு செய்து, பிறகு அதை அங்கிருந்து நகலெடுத்து எங்கு வேண்டுமோ அங்கு பதிந்துக் கொள்ளளாம்.
ஆனால் அதில் ஒரு கோளாறு நேரலாம், என்னவெனில், ஒருமுறை புதுப்பித்துவிட்டால் பழவி அத்தனையையும் இழக்க நேரிடும்.
எனவே இப்பக்கத்தில் வலது புறத்தில் New! Download Google Transliteration IME என்று இருக்கும் அதை சொடுக்கினால் வேறொரு புதிய பக்கம் திறக்கும். அதன் வலதுபுறத்தில்Download Google IME என்றிருக்கும். அதற்கு மேலே IMEக்கு சென்று தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டு தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
இதை ஒருமுறை செய்துவிட்டால், அதன் பிறகு இணையத்தின் அவசியமின்றி வேர்ட் பைலில் கூட எழுதலாம். இணையத்தில் வலைத்தளம், முகநூல், இத்யாதி.. இத்யாதி.. என எங்கு வேண்டுமாயினும் உச்சரிப்பின் படி தட்டச்சு செய்து ஸ்பேஸ் கொடுத்தால் போதும், தமிழில் எழுத்துக்கள் அழகாக பிறக்கும்!
மிக்க நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக