கணணித்தமிழ்: பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

ராகா.காம்-இல் இருந்து இலவசமாக பாடல்கள் தரவிறக்கம் செய்திட...

Post by ராஜ்அருண் on Sat Mar 24, 2012 11:10 am
எல்லோரும் ராகாவிற்கு சென்று பாடல்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அதில் பாடல்கள் தரவிறக்கம் செய்திட, பணம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் எப்படி இலவசமாக, ராகா மற்றும் அனைத்து பாட்காஸ்ட் தளங்களில் (embed செய்ய பட்ட ஒலி உள்பட) இருந்து தரவிறக்கம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

ராகா.காம், tamilbeat போன்ற இணைய தளங்களில் இருந்து மட்டுமல்ல, எந்த ஒலியை உங்கள் கணினியில் இருந்து கேட்டாலும் அதை நீங்கள் பதிவு செய்யலாம்.
முதலில், இந்த இணைய தளத்தில் இருந்து, mymp3 recorder -ஐ பதிவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவவும்.



பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1)இப்போது நிறுவிய மென்பொருளை இயக்கவும். படத்தில் காட்டியது போல் திரை திறக்கும். முதலில், ”Source" என்பதை கிளிக் செய்து, வலது புறத்தில் இருக்கும் “SteroMix"-ஐ கிளிக் செய்யவும்.

2). இப்போது, ராகா.காம் அல்லது உங்களுக்கு பிடித்தப் பாடல்கள் “ஒலிபரப்பும்” இணைய தளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு பிடித்த பாடலை ஓட விடவும். (இணைய இணைப்பு மெதுவாக இருந்தால், பாஸ் செய்து விட்டு, buffer ஆகி முடிந்தவுடன் ப்ளே செய்யுங்கள். (ராகா.காமில் இருந்து பாடல் கேட்க ரியல் ப்ளேயர் வேண்டும். முதலில் real player-ஐ உங்கள் கணினியில் நிறுவுங்கள். real player-ஐ பெற்றிட இங்கே செல்லவும்.

3). அதே நேரம், இந்த மென்பொருளில் “Record"(சிவப்பு நிற பொத்தான்) பொத்தானை அழுத்தவும். இப்போது, உங்கள் ஒலிபெருக்கியில் பாடும் பாட்டு, உங்கள் கணினியில் பதிவு ஆகிறது.

4). பாடல் முடிந்த பின், ”ஸ்டாப்” (வெள்ளை நிற பொத்தான்)-ஐ கிளிக் செய்யவும். சரிபார்த்து கொள்ள, ப்ளே செய்து பார்க்கவும்.

5). இன்னும் உங்கள் கணினியில் நிரந்தரமாக பதிவாக வில்லை. பாதுகாப்பாக, சேமித்திட “Save To Mp3" கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பான இடத்தில் சேமித்திடுங்கள். “Save to wav" என்று கொடுத்தால், அதிக கொள்ளளவு எடுக்கும்.

அவ்வளவு தான். இப்படி எந்த இணைய தளத்தில் இருந்தும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக