கணணித்தமிழ்

புதன், 23 நவம்பர், 2011


உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை கணணியில் சேமித்து வைப்பதற்கு

100க்கும் மேற்பட்ட இணையங்களில் கிடைக்கும் வீடியோக்களை நம் கணணியில் சேமித்து வைத்துக்கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
நாளும் புதிது புதிதாக பல வீடியோ தளங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது, இதில் பயனுள்ள வீடியோக்களையும் அறிவை வளர்க்கும் வீடியோக்களும் கிடைக்கிறது. இப்படி இணையத்தில் 100க்கு மேற்பட்ட தளங்களில் கிடைக்கும் வீடியோவை தரவிறக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை தரவிறக்க வேண்டுமோ அந்த தளத்தின் குறிப்பிட்ட வீடியோவின் URL முகவரியை கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் அந்த வீடியோ அவர்களின் தளத்திற்கு செல்வது போல் செய்தி காட்டும்.
அடுத்து வரும் திரையில் என்ன போர்மட்- வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கிய உடன் போர்மட் மாற சில நிமிடங்கள் எடுத்த பின் அடுத்து வரும் திரையில் Click Here to Download your video! என்பதை சொடுக்கி தரவிறக்கலாம்.
ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பரங்கள் அதிக அளவில் தெரிவது நம்மை எரிச்சல் படுத்தினாலும் நாம் விரும்பும் போர்மட்டில் சேமிக்க வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக