கணணித்தமிழ்

வியாழன், 3 நவம்பர், 2011


போட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும் குறைக்க

நம்மிடமோ அல்லது கூகுளில் தேடியந்திரத்தில் இருந்தோ புகைப்படங்களை நாம் பற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பிளாக்குகள்,பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற தளங்களில் புகைப்படங்களை பகிர்கிறோம். இதில் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் தரம் மிகுந்த போட்டோக்கள் 5mb முதல் 10mb வரை இருக்கும். இது போன்ற புகைப்படங்களை சமூக தளங்களில் அப்லோட் செய்தால் மிகவும் நேரம் எடுக்கும். மற்றும் உங்கள் பிளாக்குகளில் போட்டால் பதிவு திறப்பதற்கும் அதிக நேரம் எடுக்கும் இதனால் வாசகர்களை இழக்க நேரிடலாம். மற்றும் நீங்கள் limited band width hosting உபயோகித்தால் தேவையில்லாமல் உங்கள் பணம் தான் விரயமாகும். இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளது JPEGmini என்ற புதிய ஆன்லைன் டூல்.

மேலே உள்ள படத்தை பாருங்கள் 2.5 mb அளவாக இருந்த புகைப்படத்தை வெறும் 500KB யாக மாற்றி உள்ளது அதும் படத்தின் தரம் துளியும் குறையாமல்.
போட்டோவின் அளவு  குறைக்கப்படும் அளவு 
8 MP and higher                                  70% - 80%
5 - 7 MP                                               60 - 75%
3 MP                                                    50 - 60%
2 MP                                                    30 - 50%
1024x768                                             25 - 35%
800x600                                               20 - 25%
640x480                                               10 - 20%

உபயோகிக்கும் முறை:
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க இந்த தளத்திற்கு JPEGmini செல்லுங்கள். அங்கு உள்ள Select Photo என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் அளவு குறைக்க வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  அவ்வளுதான் உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி அளவு குறைக்கப்ப பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக