கணணித்தமிழ்

சனி, 22 டிசம்பர், 2012


ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது.
இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம்.
அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களுக்காக ஆன்லை புகைப்பட எடிட்டிங் சேவைகள் இருக்கவே இருக்கின்றன.அதாவது இணையத்தின் மூலமே புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி கொள்ளலாம்.
இந்த வசதியை தான் வழங்குகிறது பிக்புல் இணையதளம்.
ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் என்று வர்ணிக்க கூடிய இந்த தளம் மிக எளிதாக புகைப்படங்களை திருத்தி கொள்ள வழி செய்கிறது.
இதற்காக புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றிவிட்டு,அதற்கு தேவையான பின்னணி அமைப்பு மற்றும் இதர திருத்தங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
திருத்தங்கள் என்று வரும் போது புகைப்படத்தின் அழகை மேம்படுத்த தொழில்முறையாக மேற்கொள்ளப்படும் பல்வேறு யுத்திகளை உள்ளடக்கியது.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்து முடித்துவிடலாம்.
இவற்றை தேர்வு செய்து புகைப்படத்தை அழகாக்கி கொண்ட பிறகு அதனை அப்படியே கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.அப்படியே இமெயில் பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.picfull.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக