கணணித்தமிழ்

வியாழன், 18 நவம்பர், 2010

'இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' 

முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்.
''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துபோகும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. குறிப்பிட்ட வெப்சைட்டுகளின் 'லாக் இன்' பேஜ் ஓப்பன் செய்யும்போது, பூட்டு போன்ற ஒரு ஐகான் வரும். அதை க்ளிக் செய்தால் எஸ்.எஸ்.எல். சான்றிதழ் வாங்கியுள்ளார்களா என்பதை அறிந்துகொள்ளலாம். அந்தச் சான்றிதழ் யாருக்கு, யாரால் வழங்கப்படுகிறது, காலாவதியாகும் நாள் போன்ற தகவல்கள் அதில் இருக்கும். இவை இருந்தால், அந்தத் தளத்தில் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதே. இந்தத் தளங்களில் உங்கள் பெயரை 'செல்வம்' என்று டைப் செய்தால், அது 'செல்வம்' என்று இல்லாமல் வேறு வித்தியாசமான வடிவில் அடுத்தகட்ட பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும். இதனால் அந்தத் தகவல்களை இடைமறித்துத் திருட முடியாது. அப்படியே மீறி ஏதேனும் தவறுகள் நடந்துவிட்டது என்றாலும், சம்பந்தப்பட்ட இணையதளத்தின் மீது உங்களால் வழக்குத் தொடர முடியும். பொதுவாக, இணையதளங்களின் முகவரியை மட்டும் டைப் செய்து, என்டர் கொடுத்தால், http:// என்று முகவரி தொடங்கும். எஸ்.எஸ்.எல். சான்றிதழ் பெற்றுள்ள இணையதளங்களில் http:// யுடன் கூடுதலாக 's' இருக்கும் (https:). இதுவே பாதுகாப்பான இணையதளங்களைக் கண்டு பிடிக்க எளிய வழி. இவை தவிர, மற்றவை ஏமாற்றும் தளங்களாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது!'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக