கணணித்தமிழ்: 5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்

வியாழன், 15 ஜனவரி, 2015

5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்


கணினியில் நீங்கள் பாடல்களை 5.1ல் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் இங்கே தரவிறக்குங்கள் எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது தற்போது இது சோதனை பதிப்பு அளவிலே தான் இருக்கிறது ஆனால் பாடல் கேட்பதென்றால் 2.1 என்பதுதான் சிறப்பாக இருக்கும் சினிமா பார்ப்பதென்றால் 5.1 நல்ல விருந்தாக இருக்கும்.

அடுத்து நாம் சாதரணமாக நாம் பாடல்களை அதிகமாக விலையின் காரணம் கொண்டும் MP3 பாடல்களை கேட்கிறோம் சரி இந்த MP3 பாடல் கேட்கும் போது நாம் முழுமையான இசையை கேட்கிறோமா என்றால் நிச்சியம் இல்லை காரணம் ஒரு பாடலின் தரம் குறையாமல் இருக்கும் போது குறைந்தபட்சம் 70 முதல் 80MB இருக்கும் அதைத்தான் நாம் அதன் தரத்தையும் சில நம் காதுகளால் கேட்க முடியாத இசையையும் இந்த MP3 பார்மட்டானது முழுவதுமாக நீக்கிவிட்டு நமக்கு அதை வெறும் 4MBக்குள் மாற்றித்தருகிறது எனவேதான் நல்ல இசையை விரும்பும் பிரியர்கள் ஆடியோ சிடியைத்தான் பயன்படுத்தி கேட்பார்கள் அதிலும் நம்மைப்போல 5.1 ஹோம் சிஸ்டம் பாடல் கேட்பதற்கு சுகமாக இருக்காது சரி விஷயத்துக்கு வருவோம் இந்த ஆடியோ சிடியில் உள்ள பாடலை நாம் நேரடியாக காப்பி எடுக்கமுடியாது நீங்கள் வேண்டுமானல் அதை காப்பி எடுத்து பாருங்கள் மொத்த அளவு வெறும் 200Kbக்குள் இருக்கும் சரி நமக்கு விருப்பமான பாடலை ஆடியோ சிடியில் இருந்து எப்படி MP3பார்மட்டுக்கும் காப்பி எடுப்பது என பார்க்கலாம் இதற்கு எந்த மென்பொருளும் அவசியமில்லை காரனம் மைக்ரோசாப்ட்டின் இயங்குதளம் பொதியில் windows media player இனைக்கப்பட்டு தான் வருகிறது இனி நீங்கள் சிடி டிரைவில் ஆடியோ சிடி குறுந்தகடை உள்ளிடுங்கள் அடுத்து உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரை திறந்துகொள்ளுங்கள் இனி இடது புறம் பான் விண்டோவில் Copy from Cd என்பதை தெரிவு செய்யுங்கள் அடுத்ததாக பாடல்களை தேர்வு செய்யுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



இனி நீங்கள் செய்யவேண்டியது Tools ->Options கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Copy Music என்கிற டேப் திறந்து அதில் Change என்பதில் கிளிக்கி பாடல்களை சேமிக்க விரும்பும் இடத்தை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுத்து வெளியேறவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.



இனி உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் பாருங்கள் Copy Music என ஒரு ரேடியோ பட்டன் இருக்கிறதா அதை கிளிக்குங்கள் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியின் வேகத்தை பொருத்து உங்கள் ஆடியோ சிடியில் இருந்து பாடலை MP3யாக மாற்றியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக