கணணித்தமிழ்

வெள்ளி, 29 அக்டோபர், 2010



முந்தைய பதிவில் நண்பர் ஓருவர் வீடியோவிலிருந்து
படம் எடுப்பது பற்றி கேட்டிருந்தார் .அவருக்கான பதிவு இது.

2009kr கூறியது...

useful information. Thanks
நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி



நம்மிடம் வீடியோ படங்கள் இருக்கும் . அதில் உள்ள குறிப்பிட்ட
நடிகையோ - நடிகரோ வரும் ஸ்டில் அருமையாக இருக்கும்.
அந்த குறிப்பிட்ட ப்ரேம் வரும் படத்தை நாம் புகைப்படமாக
எடுத்து நமது கணிணியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது 5 எம்.பி. அளவிலே உள்ள சாப்ட்வேர்தான்.
இதை ரன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
இதில் உள்ள Source கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள
மூவி-வீடியோ படத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழ்கண்டவாறு படம் வரும். இதில் உங்களுக்கு பிடித்த இடம்
வர இதில் உள்ள ஸ்லைடரை மெதுவாக நகர்த்துங்கள்.குறிப்பிட்ட
இடம் வந்ததும் இதில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்ய
உங்களுக்கு படம் ஆனது ப்ரேம் பை ப்ரேம் நகர ஆரம்பிக்கும்.
தேவையான இடம் வந்ததும் நகர்த்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதில் நமது பெயரையும் பெயர் வரும் இடத்தையும் நாம்
தேர்வு செய்யலாம்.Embeded Textஎன்கின்ற இடத்தில் Fx Frame Caputre
என இருக்கும். அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் பெயரை
தட்டச்சு செய்யலாம். நான் Velang.blogspot.com என்கின்ற பெயரை
தட்டச்சு செய்துள்ளேன். பெயர் வரும் இடத்தையும் நாம்
முடிவுசெய்யலாம். இதில் உள்ள Left மற்றும் Top-ல் அளவினை
குறிக்க படத்தில் நமது பெயர் அந்த இடத்தில் வரும். மேலும்
Font -Size - Style - Color-ஆகியவற்றையும் நாம் தேர்வு செய்யலாம்.
இறுதியாக Capture என கொடுக்க சேமிக்கும் இடத்தை தேர்வு
செய்து படம் எந்த பார்மெட்டில் வேண்டும் என்பதையும் தேர்வு
செய்து இறுதியில் ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு படம் ரெடி.
அசின் ரசிகர்களு்க்காக தேர்வு செய்துள்ள படம்.
உங்களுக்காக பாவனா படம் சில காட்சிகள் கீழே:-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக