கணணித்தமிழ்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? 

மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. 




என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது...



இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவரு மாதிரி இருக்காரு. ஆனா அவரு பதிவுல ஒரு இளமை புத்துணர்ச்சி கிடைக்குதுப்பா. அவருடைய அனுபவ அறிவு நமக்கும் உதவலாம். முடிஞ்சா அவரு பக்கம் போயி பாருங்க. அய்யா உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு...:-) உண்மையிலே தான்.


பதிவுகள்-ல எப்படி படம் போடுறதுன்னு நமக்கு நல்லாத் தெரியும். அதான்பா, சும்மா ஒன்னும் இல்லாத சப்பை மேட்டரை பல பில்ட்-அப் குடுத்து அதுக்கு தலைப்ப கவர்ச்சியா வச்சு அம்புட்டு பேரையும் கூப்புடுறது. (ஏய் யாருப்பா அது, இப்ப நீ மட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காயின்னு சொல்றது). ஆனா எப்படி பாட்டு போடுறதுன்னு இப்ப நான் சொல்றேன். ஏற்கனவே யாரும் சொல்லிருக்கலாம். இருந்தாலும் நானுஞ் சொல்லுறேன். நம்ம பதிவு மொக்கையா இருந்தாலும், சிலருக்கு பாட்டுக் கேட்ட சந்தோஷமாவது இருக்கட்டும். :-)




கீழ உள்ள gadjet இணையத்துல கிடைச்சது தான். நான் ஒரு சில மாறுதல் பண்ணிருக்கேன்.

கீழ உள்ள வெள்ளைக்காரனோட எழுத்துக்கள புடிச்சுகிட்டு போயி நாம "blogger account"-ல "login" பண்ணிட்டு, "layout"-ல "page elements"-ஐ அமுக்கி, அதுல "Add a Gadjet"-ஐ தொறந்து அதுக்குள்ளே "HTML/JavaScript" ரூமுக்குள்ளே "content"-க்கு கீழ சிறை வச்சிடுங்க...ஆமா. அவன் அதுக்குள்ளே கிடந்தாத்தான் பாட்டுப்படுவான். "Title"-ல அவனுக்கு பேரு வச்சிடுங்க.


இதுல, height, width-ஐ உங்க ப்ளாக் அளவுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கங்க. அப்புறம் உங்க ப்ளாக்ல இது சைடுல தெரியும். கீழ்நோக்கு அம்புக்குறியை(ஏய் dropdown menu-வை சொல்லறேன் ராசா) அமுக்கி உங்களுக்குத் தேவையானதை தேர்ந்து எடுத்துக்கங்க.


அதுல சிலது நம்ம அரசாங்க அதிகாரிங்க மாதிரி வேலை செய்யாது. ஏன்னு என்னைய கேக்கக்கூடாது. ஏன், அவங்களையே (ரேடியோக்காரங்களை) நம்ம கேட்க முடியாது. சம்பளம் வாங்குற நம்ம அதிகாரிகளையே கேட்க முடியலை...இவங்க இலவசமாத்தானே நமக்கு குடுக்குறாங்க. அப்புறம் எப்படி நம்ம தட்டி கேட்க முடியும்? போயி இலவசமா பொட்டில பாட்டுக் கேளுங்க...கேளுங்க....கேட்டுக்கிட்டே இருங்க...

Posted Image

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&up_myautoplay=true&up_myplayerheight=70&up_myplayerwidth=200&up_mycolor=%23FFFFFF&synd=open&w=200&h=150&border=%23ffffff%7C0px%2C1px+solid+%23004488%7C0px%2C1px+solid+%23005599%7C0px%2C1px+solid+%230077BB%7C0px%2C1px+solid+%230088CC&output=js"></script>
Could not find the possible script tags, you can only include BRPS client brps.js script once.


http://thisaikaati.b...%AE%AE%E0%AF%8D 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக